மின்வேலியில் சிக்கி கல்லூரி மாணவர் பலி

மின்வேலியில் சிக்கி கல்லூரி மாணவர் பலி
X

மின்வேலியில் சிக்கி கல்லூரி மாணவர் பலி

போளூர் அருகே மின்வேலியில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த அலங்காரமங்கலம் கிராமத்தை சேர்ந்த பூவாரி (வயது 44) மகன் நாவலன் (வயது 19), கலசபாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் விளாப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பொன்னன் என்பவரது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி நாவலன் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story