ஸ்கூட்டர் சுவரில் மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

ஸ்கூட்டர் சுவரில் மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

விபத்து

நாகர்கோவிலில் ஸ்கூட்டர் சுவரில் மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கட்டையன்விளை பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்வன் மகன் ஜெர்வின் பேல்சன் (18) இவர் நாகர்கோவில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மதியம் ஜெர்வின் வடசேரியில் உள்ள நண்பரை பார்க்க ஸ்கூட்டரில் சென்றார். பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பில் இருந்து புது குடியிருப்பு செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலை நடுவில் ஒரு பெரிய காங்கிரீட் கல் கிடந்துள்ளது. இதனை கவனிக்காமல் ஜெர்வின் ஸ்கூட்டர் அதன் மீது ஏற்றி இறக்கினார். இதில் நிலை தடுமாறிய ஸ்கூட்டர் கட்டுப்பாட்டு இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி அருகில் உள்ள ஒரு வீட்டின் சுற்றுச்சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் தலையில் பலத்த காய ஏற்பட்டு ஜெர்வின் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story