புதுக்கடை அருகே விபத்தில் காயம் அடைந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு

புதுக்கடை அருகே விபத்தில் காயம் அடைந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
X
உயிரிழந்த ஜெயபுவனேஷ்
புதுக்கடை அருகே விபத்தில் காயம் அடைந்த கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள ஆனந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் (53). இவர் அரசு போக்குவரத்து கழக குழித்துறை பணிமனையில் கண்டக்டராக பணி புரிந்து வருகிறார். இவரது மகன் ஜெயபுவனேஷ் (23).

பொறியியல் படிப்பு முடித்து தற்போது ராணுவத்தில் வேலைக்காக முதற்கட்ட தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் சம்பவ தினம் தந்தையும் மகனுமாக மார்த்தாண்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது, பைக் நிலை தடுமாறி சாலை தடுப்பு சுவரில் மோதியது. இதில் தந்தை மகன் இருவரும் படுகாயம் அடைந்தனர். தலையில் பலத்த காயமடைந்த மகன் ஜெயபுவனேஷ் திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயபுவனேஷ் நேற்று இறந்தார். இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story