தோழியுடன் கல்லூரி மாணவர் மாயம்
கல்லூரி மாணவர் மாயம்
அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் கல்யாணசுந்தரம் தெரு பகுதியை சேர்ந்தவர் அக்பர். இவரது மகன் ஷேக் அப்துல்லா இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு ஒரு இளம் பெண்ணை அவர் வீட்டுக்கு அழைத்து வந்து தனது தோழியை என அறிமுகம் செய்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் சகிலா பி வி மகனை கண்டித்தார். அதன் பின்னர் சேக் அப்துல்லா அந்த பெண்ணை அவரது வீட்டில் விட்டுவிட்டு வருவதாக கூறிச் சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை இது குறித்து சகிலா பிவி அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story