வாக்களிப்பு குறித்த கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

கலைநிகழ்ச்சிகள்
கன்னியாகுமரி பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்கள் நடைபெறுவதை முன்னிட்டு, கிராமிய கலை நிகழ்ச்சி வாயிலாக கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே தேர்தல் விழிப்புணர் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நவீன மின்னனு வாகனத்தில் 100% வாக்களிப்பதன் அவசியத்தை குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கிராமிய கலை குழுவினர் நேற்று நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பது வலியுறுத்தி விழிப்புணர் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
தொடர்ந்து சுங்கான் கடை பஸ் நிறுத்தத்திலும் கலைநிகழ்ச்சியில் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, செய்தி மக்கள் தொடர் துறையின் மின்னணு வாகனங்களும் விழிப்புணர் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் கல்லூரி மாணவிகள் வாக்காளர்கள் கையெழுத்தியக்கத்தில் ஈடுபட்டனர்.
