வேளாண் கண்காட்சி நடத்திய கல்லூரி மாணவிகள்            

பட்டுக்கோட்டையில் கல்லூரி மாணவிகள் இணைந்து வேளாண் கண்காட்சி நடத்தினர்.            

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் ஈச்சங்கோட்டை முனைவர் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் கிராமப்புற வேளாண்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனொரு பகுதியாக பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் கல்லூரி மாணவிகள் வேளாண் கண்காட்சியை நடத்தினர். இக்கண்காட்சியில் மாணவிகள் தங்கள் கிராமப்புற வேளாண் பணியில் கண்ட சிறந்த வயல்கள் மற்றும் அதைச் சார்ந்த தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தும் விதமாக அதன் மாதிரிகளை செய்து வைத்தனர். அது மட்டுமின்றி 50 வகையான பாரம்பரிய நெல் விதைகள் மற்றும் 50 வகையான பாரம்பரிய காய்கறி விதைகள் போன்றவற்றையும் காட்சிப்படுத்தினர்.

இந்நிகழ்வில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்ட பயிர் பூஸ்டர்கள் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் பொறிகள் போன்றவையும் காட்சிப்படுத்தப்பட்டது. இப்பகுதியில் அதிகப்படியாக தென்னை சாகுபடி செய்து வருவதனால் தென்னையின் மதிப்பு கூட்டுப் பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டது. இக்கண்காட்சியில், உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய அலுவலர்கள் மற்றும் சுற்றுப் பகுதி கிராமத்தில் உள்ள விவசாயிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story