வண்ண ஓவியங்கள் தீட்டும் பணி : கனிமொழி எம்பி துவக்கி வைப்பு
வண்ணம் தீட்டும் கனிமொழி எம்பி
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் வண்ண ஓவியங்கள் தீட்டும் பணியை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் வண்ண ஓவியங்கள் தீட்டும் பணி இன்று (09/03/2024) தூத்துக்குடியில் உள்ள திருநெல்வேலி பைபாஸ் சந்திப்பில் துவங்கப்பட்டது. திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு, வண்ண ஓவியங்கள் தீட்டும் பணியைத் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் இரா.ஐஸ்வா்யா, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் செ.ஜெனிட்டா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்..
Next Story