நவோதயா பள்ளியில் மழலையர் மாணவ மாணவியர் (கலர்ஸ் டே) வண்ணங்கள் தினம் கொண்டாட்டம்

நவோதயா பள்ளியில் மழலையர் மாணவ மாணவியர் (கலர்ஸ் டே) வண்ணங்கள் தினம் கொண்டாட்டம்

நவோதயா அகாடமி 

நாமக்கல் நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் மழலையர் மாணவ மாணவியர் (கலர்ஸ் டே) வண்ணங்கள் தினம் கொண்டாட்டம்.

நாமக்கல் தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் மாணவ, மாணவியர்கள் வண்ணங்கள் தினம் (கலர்ஸ் டே) கொண்டாடினார்கள். இவ்விழாவை பள்ளியின் பொருளார் தொடங்கி வைத்து அவர் பேசுகையில் “குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் நிறங்களும் அதன் மருத்துவ பயன்கள், நிறங்கள் உணர்த்தும் செய்திகளையும் குழந்தைகள் அறிந்திருக்கவேண்டும், ஒவ்வொரு நிறங்களுக்கும் ஒவ்வொரு தனித் தன்மைகள் உண்டு என்பதை குழந்தைகள் புரிந்திருக்க வேண்டும் என்று கூறினார். அனைத்து மழலைச் செல்வங்களுக்கும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்” மேலும் குழந்தைகள் கற்றலில் மாண்டிச்சோரி கல்வி முறையில் முதலில் குழந்தைகளுக்கு செய்து கற்றல் இருக்கவேண்டும்; என்பதன் அடிப்படையிலும் கற்றல் ஆர்வத்தை குழந்தைகள் மத்தியில் தூண்டுவதற்கும், நிறங்களை வைத்து குழந்தைகள் பொருள்களின் பெயர்களை எளிதில் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும். இந்த (கலர்ஸ் டே) வண்ணங்கள் தினம் கொண்டாடப்படுகின்றது.

குழந்தைகளும் ஆவர்வமாக நிறங்கள் அதாவது வெண்மை-தூய்மை, பச்சை – அன்பு, மஞ்சள் - செழுமை என்றும் போக்குவரத்தில் பயன் படுத்தப்படும் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிறங்கள் அவற்றின் குறியீடுகளையும் (நில்,கவனி,புறப்படு) என்று கூறி நடித்துக்காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்கள்.

ஓவ்வொரு குழந்தைகளும் தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தினார்கள். இவ்விழாவை மிகவும் சிறப்பா ஏற்பாடு செய்திருந்த ஆசிரியைகள், குழந்தைகள் மற்றும் இதர பணியாளர்கள், ஆண்டிஸ் அனைவரையும் பள்ளி முதல்வர் அவர்கள் பாராட்டி வாழ்த்தினார்கள்.

Tags

Next Story