விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாக கூட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாக கூட்டம்

ஒன்றிய நிர்வாக கூட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாக கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாக கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரத்தினவேல் பெரம்பலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கலையரசன் ஆகியோர் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஜனவரி 8ம் தேதி மாலை நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணக்குமார் வரவேற்புரை ஆற்றிய நிகழ்சியில் மாவட்ட செய்தித் தொடர்பாளர் உதயகுமார் மண்டல துணை செயலாளர்கள் வழக்கறிஞர் ஸ்டாலின், லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல செயலாளர் அன்பானந்தம் மாநில செயலாளர் வீர செங்கோலன் நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் மன்னர்மன்னன் முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் மாநில துணை செயலாளர்கள் முனைவர் தமிழ்க்குமரன் ஆசிரியர் பிரேம்குமார் வழக்கறிஞர் அண்ணாதுரை வழக்கறிஞர் சீனிவாசராவ் ஒன்றிய செயலாளர்கள் பாஸ்கர், பிச்சைப்பிள்ளை, மனோகரன், வரதராஜன் நந்தன் இளமாறன் வெற்றியழகன் இடிமுழக்கம் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில், வரும் ஜனவரி-26 திருச்சியில் நடைபெறும் வெல்லும் சனநாயகம் மாநாட்டிற்கு அனைத்து கிராமங்களிலும் மக்களை திரட்டி வாகனம் ஏற்பாடுகள் செய்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி மாநாட்டை வெற்றி பெற வைக்க வேண்டும், அனைத்து கிராமங்களிலும் விளம்பர பதாகைகள் வைக்க வேண்டும். அனைத்து கிராம பொதுமக்கள் அனைவரிடமும் மாநாடு குறித்த துண்டறிக்கையை அச்சிடப்பட்டு வழங்க வேண்டும்.. அனைத்து பகுதிகளிலும் மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இறுதியாக பெரம்பலூர் நகர செயலாளர் சண்முகசுந்தரம் நன்றியுரையாற்றினார்.

Tags

Next Story