தனியார் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட நகைச்சுவை நடிகர் தாமு

தனியார் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட நகைச்சுவை நடிகர் தாமு

நிகழ்ச்சியில் பேசும் நடிகர் தாமு

சாத்தூர் தனியார் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட நகைச்சுவை நடிகர் தாமு.

விருதுநகர் அருகே சாத்தூர் தனியார் சிபிஎஸ்சி பள்ளியின் இரண்டாம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக காமெடி நடிகரும் மிமிக்ரி ஆர்டிஸ்ட் மோட்டிவேஷனல் பேச்சாளர் கலாம் ஆதரவாளர் நடிகர் தாமு கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

ஆண்டு விழா நிகழ்ச்சியில் முன்னதாக பள்ளி மாணவ மாணவிகளின் நடன கலை நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பெற்றோர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். அதன் பின்னர் நடிகர் தாமு பேச தொடங்கிய போது கூட்டத்திற்கு நடுவே நாய் ஒன்று வந்து நின்றது.

அப்போது அவர் என் ரசிகன் பைரவன் வந்து விட்டான். அவனுக்கு ஒரு சேர போடுங்க என்று கூறினார். அதற்கு அங்கிருந்த அவர் ஒருவர் கூட்டத்தின் நடுவே வந்த நாயை விரட்டி அடித்தார். அதன் பின்னர் பேச தொடங்கிய நடிகர் தாமு ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு வந்த பெற்றோர்கள் அனைவரும் தங்களது செல்போனை ஆப் செய்து இந்த நிகழ்ச்சியை கவனிக்க வேண்டுமென அறிவுறுத்தினார். அதிலும் ஒரு சிலர் மிமிக்ரி செய்து கொண்டிருக்கும் போது மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்ததால் கடும் கோபம் அடைந்தார்.

பின்னர் பெற்றோர்கள் பிள்ளைகளை சரியாக கவனிக்காமல் செல்போனிலேயே மூழ்கி இருக்கின்றனர். உங்களைப் போன்று தான் உங்கள் பிள்ளைகளும் இருப்பார்கள். தயவுசெய்து செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து கை தட்டினால் எல்லா வியாதியும் விலகிவிடும் என அறிஞர்கள் கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார். பத்து மாதம் கருவறையில் வைத்து நம்மை சுமந்த அம்மாக்கள் தெய்வம். அதேபோல பள்ளியில் வகுப்பறையில் நம்மை சுமக்கும் ஆசிரியர்களும் மாணவர்கள் ஆகிய உங்கள் பெற்றோர்கள்.


Tags

Read MoreRead Less
Next Story