கோவையில் தியாகிகள் நினைவு நாள் அனுசரிப்பு
தியாகிகள் நினைவு தினத்தில் கலந்து கொண்டவர்கள்
கோவையில் விலைவாசி உயா்வு, வேலையில்லா திண்டாட்டம்,பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 1982 ஆம் ஆண்டில் ஏஐடியுசி,சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.
இதில் 1982, ஜனவரி 19 ஆம் தேதி காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மன்னாா்குடி ஞானசேகரன் மயிலாடுதுறை அஞ்சான் நாகூரான் ஆகியோா் கொல்லப்பட்டனா்.
42 ஆம் ஆண்டு நினைவேந்தல் தெருமுனை கூட்டம் சி.ஐ.டி.யு,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் கோவை சூலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அரசு மற்றும் தனியார் துறையில் 480 நாட்களுக்கு மேல் பணியாற்றுகின்ற ஒப்பந்த ஊழியரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.விவசாய விலைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயம் சிறு மற்றும் ஜவுளி தொழிலை பாதிக்கின்ற மின்சார சட்டம் 2023ஐ ரத்து செய்ய வேண்டும்.100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி கூலியை 600 ரூபாயாக வழங்கிட வேண்டும் முறைசாரா தொழிலாளிகளுக்கு இலவச பட்டா வழங்கிட வேண்டும்.சோமனூரில் அரசு சார்பாக ஜவுளி சந்தை அமைத்திட வேண்டும்.
சுமை பணி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்திட வேண்டும்.குடிநீர் வினியோக பணியாளர்கள் துப்புரவு பணியாளர்களுக்கு நீதிமன்ற உத்தரவு 2டி/62ன் இப்படி சம்பளம் வழங்க வேண்டும். ரயில்வே, மின்சாரம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.