அமமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் அனுசரிப்பு
அமமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் அனுசரிப்பு
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு டிடிவி. தினகரன், அவர்களின் ஆணைக்கிணங்க அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நாமக்கல் வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக பேரறிஞர் அண்ணா அவர்களின் 55.வது நினைவு நாள் அனுசரிப்பு வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நாமக்கல் வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஏ.பி. பழனிவேல், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அனைவரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட கழக அலுவலகத்தில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டமும் மற்றும் பிப்ரவரி 24 புரட்சித்தலைவி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த நிகழ்விற்கு மாவட்ட கழக அவைத் தலைவர் எஸ். பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட துணை செயலாளர்கள் கா. முருகன், மற்றும் அம்பிகா, இணைச் செயலாளர் பத்மாவதி, ராசிபுரம் நகர கழக செயலாளர் எஸ் வேலுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் டீ. உதயகுமார், ராசிபுரம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராஜா, நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சதீஷ்குமார், வெண்ணந்தூர் ஒன்றிய கழகச் செயலாளர் கண்ணன் என்கின்ற சீனிவாசன், மேற்கு ஒன்றியம் சீனிவாசன், சேந்தமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் முருகேசன், எருமப்பட்டி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சிவக்குமார், கொல்லிமலை ஒன்றிய கழகச் செயலாளர் ரவிச்சந்திரன், பேரூர் கழகச் செயலாளர்கள் பேட்டை பெரியசாமி, பட்டணம் ரஞ்சித், சேந்தமங்கலம் பேரூர் கழகச் செயலாளர் சுரேஷ், வெண்ணந்தூர் சேகர், மற்றும் சார்பு மன்ற மாவட்ட கழக செயலாளர் எம்.ஜி. ஆர்.மன்றம் குட்டி நடராஜன், அம்மா பேரவை மேகநாதன்,சுற்றுச் சூழல் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், சந்தோஷ் குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story