பேருந்து சேவை துவக்கம்

பேருந்து சேவை துவக்கம்

லால்குடியில் இருந்து திருமானூர் வரை வந்து செல்லும் அரசு பேருந்து வழிதடம், தற்போது கண்டிராதித்தம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  

லால்குடியில் இருந்து திருமானூர் வரை வந்து செல்லும் அரசு பேருந்து வழிதடம், தற்போது கண்டிராதித்தம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் கண்டிராதித்தம் கிராம மக்கள் லால்குடியில் இருந்து திருமானூர் வரை வந்து செல்லும் அரசு பேருந்து வழிதடத்தை கண்டிராதித்தம் கிராமம் வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்நிலையில் அரசு பேருந்து வழிதடத்தை நீட்டித்து பேருந்து சேவையினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி கண்டிராதித்தம் கிராமத்தில் இன்று நடைப்பெற்றது.

இதனை அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா தொடங்கி வைத்தார். இதில் லால்குடி அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் மற்றும் திமுக, மதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story