வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்

வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்
X

வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்

திருவண்ணாமலை மாவட்டம்,பிரம்மதேசம் பகுதியில் பல்வேறு வளர்ச்சிதிட்ட பணிகளை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

செய்யாறு அருகே வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் பிரம்மதேசம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 2023 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் பிரம்மதேசம் மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கலையரங்கம் கட்டிடம், 2023 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை, பிரம்மதேசம் ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் SFC நிதியின் கீழ் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை அமைத்தல் மற்றும் ரூபாய் 5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கலைஞர் நூற்றாண்டு நுழைவாயில் கட்டிடம் CFSIDS 2022-2023 ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 56 லட்சம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறை கொண்ட புதிய ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடத்தை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி திறந்து வைத்தார்.

உடன் மாவட்ட கழக துணை செயலாளர் க.லோகநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மாமண்டூர் D.ராஜி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சம்பத், ஒன்றிய கழக செயலாளர்கள் சங்கர், தினகரன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story