ரூ.20 லட்சம் மதிப்பில் வளர்ச்சித்திட்ட பணிகள் துவக்கம்
தாரமங்கலம் அருகே செலவடை ஊராட்சி வெண்ணனம்பட்டியில் ரூ.20லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுமான பணி மற்றும் புதிதாக ரேஷன் கடை கட்டும் கட்டுமான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செலவடை ஊராட்சி வெண்ணனம்பட்டியில் 20லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுமான பணி மற்றும் புதிதாக ரேஷன் கடை கட்டும் கட்டுமான பணிகள் தொடக்க விழாவில் அதிமுக சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், ஓமலூர் சட்டமன்ற உறுப்பினருமான மணி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். பின்னர் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் ரேஷன் கடை கட்டுவதற்காக தனது நிலத்தை தானமாக வழங்கிய விவசாயி ராஜேந்திரன் என்பவருக்கு சால்வை அணிவித்து மரியாதையும் செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் விக்னேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் குமார் குமரேசன் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ரவி, ராமசுந்திரம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story