தானியங்கி மழைமானிகள் நிறுவும் பணி துவக்கம்
ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்
நாகப்பட்டினம், தெற்குபொய்கை நல்லுார், திருமருகல், திருக்கண்ணபுரம், வேளாங்கண்ணி, தேவூர், வலிவலம், வேதாரண்யம், கரியாப்பட்டினம், நாலுவேதபதி, பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி மற்றும் மூலக்கரை ஆகிய 13 கிராமங்களில் தானியங்கி மழைமானிகளும், கீழ்வேளுர் மற்றும் வேதாரண்யம் ஆகிய 2 வட்டங்களில் உள்ள இடங்களில் தானியங்கி வானிலை நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக தானியங்கி மழைமானிகள் பொருத்துவதற்கு ஏற்றவாறு கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
தற்போது தானியங்கி மழைமானிகள் அமையவுள்ள இடத்தில் கம்பிவேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேற்படி பணிகளின் செயல்பாடு, தரம் நிர்ணயிக்கப்பட்ட நாட்களுக்குள் முடித்தல் உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்யுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பே அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.