பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்கம்

பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் நான்கு பேருக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்கினார்.

பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் நான்கு பேருக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்கினார் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்ட அலுவலகத்தில் தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுதா ராணி தலைமையில் அய்யம்பேட்டை சரக கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது.

அதுசமயம் இம் முகாமில் பட்டா மாறுதல், வீட்டுமனை ஒப்படை, நில ஒப்படை, மற்றும் முதியோர் உதவித்தொகை உள்பட 123 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கு பிரித்து வழங்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்க ஜமாபந்தி அலுவலர் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் 4 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்கப்பட்டது முகாமில் பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் கண்காணிப்பாளர் ஜெயகாந்தி பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் அருணகிரி சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் முருககுமார் துணை வட்டாட்சியர்கள் அன்புக்கரசி, பிரியா, பிரபு, தமயந்தி, விவேகானந்தன் வட்ட துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி வருவாய் ஆய்வாளர் ரெஜிலா தேவி முதுநிலை வருவாய் ஆய்வாளர் வரதராஜன் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் வட்டத் தலைவர் ஆரோக்கிய பவுல்ராஜ் கோட்ட பொறுப்பாளர் நீலகண்டன் மாவட்ட இணை செயலாளர் ராஜேஷ் கிராம நிர்வாக முன்னேற்ற அலுவலர் சங்கத்தின் தலைவர் சரவணகுமார் மாவட்ட பொருளாளர் ரமேஷ் குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் நில அளவையர்கள் வருவாய் துறை ஊழியர்கள் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்

Tags

Next Story