கோவில்ராமபுரம்-போழக்குடி பேருந்து சேவை துவக்கம்

கோவில்ராமபுரம்-போழக்குடி பேருந்து சேவை துவக்கம்

துவக்க விழா 

கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவில்ராமபுரம்-போழக்குடி வரை நீட்டிக்கப்பட்ட பேருந்து சேவையை தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், எம்.பி ராமலிங்கம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, போக்குவரத்துத்துறை அமைச்சரின் வழிக்காட்டுதலின்படியும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிராமபுரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து கோவில்ராமபுரம்-போழக்குடி-கும்பகோணம் வரை பேருந்து சேவை நீட்டிக்கும் நிகழ்ச்சி கோவில்ராமபுரத்தில் நடைபெற்றது.

கும்பகோணம் மாநகர்-1 கிளை தடம் எண்: A34, கும்பகோணத்திலிருந்து போழக்குடி வரை காலை 7.30 நடையினையும், மாலை 4 மணி நடையினையும் கோவில்ராமபுரம் வழியாக ஆண்டிராமபுரம் வரை தடம் நீட்டித்து இயக்கப்படும் பேருந்தினை ஆண்டிராமபுரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து தமிழக அரசின் தலைமை கொறடா முனைவர் கோ.வி.செழியன் மற்றும் மயிலாடுதுறை எம்.பி ராமலிங்கம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வில் கும்பகோணம் மண்டல பொதுமேலாளர் இளங்கோவன், துணை மேலாளர் (வணிகம்) செந்தில்குமார், கும்பகோணம் மாநகர்-1 கிளைமேலாளர் சிவமயில்வேலன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாலகுரு, ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ்வரிஅருள், ஒன்றியக்குழு உறுப்பினர் சம்பத், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முருகானந்தம், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழிற்நுட்ப பணியாளர்கள், அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story