ஊத்தங்கரை ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் மார்கழி மாத பஜனை தொடக்கம்
ஊத்தங்கரை ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் மார்கழி மாத பஜனை (டிசம்பர் 17) அதிகாலை தொடங்கியது. ஊத்தங்கரை ஜனக்கல்யாம் மற்றும் ஆஞ்சநேயர் பக்தர்கள் ஒன்று கூடி, ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து கருட கம்ப தீபத்துடன் ஸ்ரீ ராமர், லட்சுமணர், சிதா தேவி படத்தை ஏந்தி பஜனை பாடலுடன் நகரில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு சென்றனர். அங்கு, ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமண சாமி கோவில், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், ஸ்ரீ வள்ளி தெய்வானை சுப்பிரமணிய கோயில், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில், ஸ்ரீ ஐயப்பன் கோவில், ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி கோவில், ஸ்ரீ விஷாலாம்பிகை சமேத காசி விஸ்வநாதர் ஆலயம், அரச மரத்தடி விநாயகர்,
பழைய கடை வீதியில் உள்ள விநாயகர் கோயில், தாலுகா அலுவலகமும் பின் உள்ள கோட்டை முனியப்பன் கோவில் ஆகிய சுவாமிகளுக்கு கற்பூர தீபாராதனை செய்து பஜனை பாடலுடன் மீண்டும் ஆஞ்சநேயர் கோயில் அடைந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிகள் அருள் பெற்று தினசரி மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை பஜனை தினசரி நடைபெறுகிறது. பக்தர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. ஊத்தங்கரை ஜனக் கல்யாண் சார்பிலும் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் பக்தர்கள் சார்பிலும் வருடா வருடம் மார்கழி மாதப் பஜனை நடைபெற்று வருகிறது. இந்த பஜனையில் ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.