வாக்குச்சாவடி தகவல் சீட்டு வழங்கும் பணி துவக்கம்

வாக்குச்சாவடி தகவல் சீட்டு வழங்கும் பணி துவக்கம்

மொ.நா.பூங்கொடி 

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள 16.07 லட்சம் வாக்காளா்களுக்கு வாக்குச்சாவடி தகவல் சீட்டு வழங்கும் பணி (பூத் சிலிப்) தொடங்கப்பட்டது.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 7,80,096 ஆண்கள், 8,26,737 பெண்கள், 218 மூன்றாம் பாலினத்தினா் என மொத்தம் 16,07,051 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். 1821 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு ஏப்.19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்காளா்களுக்கு வாக்குச்சாவடி தகவல் சீட்டு வழங்கும் பணி (பூத் சிலிப்) செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. இந்த வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மொ.நா.பூங்கொடி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

Tags

Read MoreRead Less
Next Story