திருக்கச்சிநம்பிகள் கோவிலில் வருஷோற்சவம் துவக்கம்

திருக்கச்சிநம்பிகள் கோவிலில் வருஷோற்சவம் துவக்கம்


 திருக்கச்சிநம்பி

காஞ்சிபுரம் திருக்கச்சிநம்பிகள் கோவிலில் நேற்று துவங்கிய வருஷோற்சவம் 10 நாட்கள் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் ரங்கசாமிகுளம் அருகே உள்ள அஷ்டபுஜபெருமாள் கோவிலில் இருந்து, வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லும் வழியில், திருக்கச்சிநம்பிகளுக்கு தனி கோவில் உள்ளது. திருக்கச்சிநம்பிக்கு மாசி மாதம், மிருகசீரிஷ நட்சத்திர தினத்தன்று மாமுல்படி எனப்படும், வருஷோற்சவ சாற்றுமறை உற்சவம் 10 நாட்கள் நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான உற்சவம் நேற்று துவங்கியது. இதில், நேற்று காலை சுவாமிக்கு துாப, தீபாராதனையும், மாலை சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிப்., 18ல் மாலை, 6:00 மணிக்கு, ஆடிசன்பேட்டை செட்டித் தெருவில், திருக்கச்சிநம்பிகள் வீதியுலா மற்றும் மண்டகப்படி உற்சவமும், பிப்., 19ல் மிருகசீரிஷ நட்சத்திர சாற்றுமறையும், மாலை, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், திருக்கச்சிநம்பிகள் சன்னிதிக்கு எழுந்தருளி சேவை சாற்றுமறை உற்சவம் நடக்கிறது.

Tags

Next Story