பூத் சிலிப் வழங்கும் பணிகள் தொடக்கம்

பூத் சிலிப் வழங்கும் பணிகள் தொடக்கம்

பூத் சிலிப் 

சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் பூத் சிலிப் வழங்கும் பணிகள் தொடக்கம்.
நாமக்கல் மக்களவை தொகுதிக்குள்பட்ட சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம் வருவாய் கிராமத்திற்குட்ட பகுதிகளில் வாக்காளர்கள் எளிதாக வாக்குச்சாவடிகளை கண்டறிந்து வாக்களிக்க வசதியாக இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கியது. இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் நூறு சதவீதம் வாக்காளர்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய வாக்காளர்கள் அவர்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிகளை எளிதாக அறிந்து கொண்டு வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிகள் குறித்து அனைத்து தகவல்களும் அடங்கிய பூத் சிலிப்பை (வாக்குச்சாவடி தகவல் சீட்டுகளை) முதற்கட்டமாக நாமக்கல் மக்களவை தொகுதிக்குள்பட்ட சங்ககிரி வட்டம், தேவூர் வருவாய் கிராமத்திற்குபட்ட கோனேரிப்பட்டி, கோனேரிப்பட்டி அக்ரஹாரம், காவேரிப்பட்டி, காவேரிப்பட்டி அக்ரஹாரம் கிராமத்திற்குள்பட்ட 20,438 வாக்காளர்களுக்கு வழங்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இப்பணிகளில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வாக்காளர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கி வருகின்றனர்.

Tags

Next Story