நாடாளுமன்ற தேர்தலையொட்டி நேற்று சேலத்தில் வணிக நிறுவனங்கள் அடைப்பு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நேற்று சேலத்தில் வணிக நிறுவனங்கள் அடைப்பு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நேற்று சேலத்தில் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன.


நாடாளுமன்ற தேர்தலையொட்டி நேற்று சேலத்தில் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன.

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. தேர்தலையொட்டி அனைத்து வணிக நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் இதுதொடர்பாக வணிக நிறுவனங்களின் பேரமைப்பு சார்பிலும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்தலையொட்டி நேற்று காலை மாநகரில் பெரும்பாலான கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.

செவ்வாய்பேட்டை, கடைவீதி, அழகாபுரம், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஜங்சன் என மாநகரின் பல்வேறு இடங்களில் மளிகை கடைகள், ஜவுளி கடைகள், நகை கடைகள், ஓட்டல்கள் என பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சேலம் செவ்வாய்பேட்டை லீ பஜார் மார்க்கெட்டுக்கும் விடுமுறை விடப்பட்டதால் நுழைவுவாயில் கேட்டுகள் பூட்டி கிடந்தன. மாநகரில் கடைகள் அடைக்கப்பட்டதால் பல சாலைகளில் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

குறிப்பாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் செவ்வாய்பேட்டை சாலையில் ஆட்கள் நடமாட்டமே இல்லாமல் இருந்தன. பிற்பகலுக்கு பின்னர் ஒரு சில கடைகள் திறக்கப்பட்டன. இதேபோல் மாநகரில் உள்ள சினிமா தியேட்டர்களிலும் தேர்தலையொட்டி காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

Tags

Next Story