விழுப்புரத்தில் வணிகவரித்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் வணிகவரித்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் வணிகவரித்துறை சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


விழுப்புரத்தில் வணிகவரித்துறை சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வணிக வரித்துறை நிர்வாகத்தின் கண்மூடித்தனமான, விஞ்ஞான பூர்வமற்ற அணுகுமுறையின் காரணமாக இன்றைக்கு அலுவலர்களும், பணியாளர்களும் மிகப்பெரிய நெருக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இதன் விளைவாக கோயம்புத்தூர் கோட்டத்தில் ஜி.எஸ்.டி. ஆய்வாளராக பணியாற்றிய வேலுச்சாமி, வேலைப்பளு வின் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதேபோல் திருநெல்வேலி கோட்டத்தில் சுழற்குழுவில் பணியாற்றிய ஜெயந்தி, ஜெயராஜ் ஆகிய 2 துணை மாநில வரி அலுவலர்களும், வணிகர் களின் புகார் அடிப்படையில் எவ்வித விசாரணையும் மேற்கொள் ளாமல் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனை கண்டித்து தமிழ்நாடு வணிகவரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பாக மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் வணிகவரி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ரவிச்சந்திரன் கண்டன உரையாற்றினார். இதில் வணிகவரித்துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவினர் பலர் கலந்துகொண்ட னர்.

Tags

Next Story