நில விற்பனையில் கமிஷன்  பிரச்சினை: முதியவருக்கு கத்தி குத்து

நில விற்பனையில் கமிஷன்   பிரச்சினை: முதியவருக்கு கத்தி குத்து

கத்திக்குத்து விழுந்த முதியவர்

நில விற்பனையில் கமிஷன்  பிரச்சினையில் திமுக நிர்வாகியும் மாற்றுத் திறனாளியாகிய முதியவருக்கு கத்தி குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதிக்குட்பட்ட குங்காரு பாளையத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து @ மணி வயது 80. திமுக நிர்வாகியும் பாசன சங்க தலைவராகவும் இருந்து வருகின்றார். இவர் தனது வருமானத்திற்காக நிலம் விற்பனை புரோக்கர் தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஜூன் 11ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் காங்கேயத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் திருப்பூரைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரும் தொழிலதிபருமான ஜெயக்குமார் என்பவரது 9 ஏக்கர் நிலத்தை காங்கேயம் செங்கோடம்பாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவருக்கு விலைபேசி கிரயம் செய்துள்ளனர்.

அப்போது நில உரிமையாளர் ஜெயக்குமாருக்கும் நில விற்பனை புரோக்கர் நாச்சிமுத்து என்பவருக்கும் புரோக்கர் கமிஷனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் புரோக்கர் கமிஷன் கொடுக்க முடியாது எனக் கூறிய நில உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மாற்றுத் திறனாளியான நாச்சிமுத்து என்பவரை தகாத வார்த்தையால் பேசி பொது இடத்தில் அவமானப்படுத்தியும் பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நாச்சிமுத்துவின் இடது கையில் குத்தியுள்ளார். இதனை இரத்த காயமடைந்த முதியவர் மற்றும் மாற்றுத்திறனாளி நாச்சிமுத்துவை காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்று முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 4 நாட்களாக விசாரணை மட்டுமே நடந்து வருகின்றது என்பது பாதிக்கப்பட்டவரை அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story