குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு ஆணையர் ஆய்வு
ஆணையர் ஆய்வு
திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன் குமார்ஜி கிரியப்பனவர் நான்காவது குடிநீர் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார்ஜி கிரியப்பனவர் கோவை மாவட்டம் அன்னூர் குருக்கிலியம்பாளையத்தில் திருப்பூர் மாநகராட்சியின் நான்காவது கூட்டு குடிநீர் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள 196 எம் எல் டி கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் திட்ட மேலாண்மை குழு (பி எம் சி) சரவணன், இளநிலை பொறியாளர் கோவிந்த பிரபாகர், (பி எம் சி) கட்டுமான மேலாளர் செல்வம்,EPE சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொறியாளர்கள் பிரைவேட் லிமிடெட் நிர்வாகிகள் உட்பட பலர் உள்ளனர்.
Next Story