மாநகராட்சி ஆணையாளர் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு!
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் 1-வது மண்டலத்திற்குட்பட்ட 13-வது வார்டு பகுதியில் கட்டிட அனுமதிக்கான இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் 1-வது மண்டலத்திற்குட்பட்ட 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள மண்டல அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வரி வசூல் மையத்தில் வரி செலுத்த வந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து வரி வசூல் மையத்தில் உள்ள வருவாய் இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் 1-வது மண்டலத்திற்குட்பட்ட 19-வது வார்டு ஆத்துப்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்...
Next Story