மிக்ஜாம் புயல் - நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த காவல் ஆணையர்

மிக்ஜாம் புயல் - நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த காவல் ஆணையர்

நிவாரண பொருட்கள் அனுப்[இ வைப்பு

பொதுமக்களிடம் இருந்து நிவாரணா பொருட்கள் பெறப்பட்டது

மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து சென்னைக்கு பொதுமக்களிடம் இருந்து பெறபட்ட ஐந்து லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை லாரி மூலம் ஆணையர் பாலகிருஷ்ணன் அனுப்பி வைத்தார் .இதில் கோவை காவல்துறையின் சார்பாக 2 லட்சத்தை 61 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள உடைகள்,ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 387 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருள்களும் மேலும் 79 ஆயிரத்து 590 ரூபாய் மதிப்புள்ள தண்ணீர் பாட்டில்கள் 61,560 மதிப்புள்ள அத்யாவசிய பொருட்கள் என சேர்த்து ஐந்து லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கபட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசியமாநகர காவல் ஆணையர் காவல் நிலையங்கள் சார்பாகவும் மக்களின் சார்பாகவும் பல்வேறு பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக கூறியவர்.

இவை காவல்துறை வாகனம் மூலம் சென்னை சென்று பொருட்களை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார். நிவாரண பொருட்களை கொண்டு செல்லக்கூடிய வாகனங்களுக்கு டோல்கேட்டில் கட்டணம் வசூலிப்பதாகவும் கட்டணம் இல்லாமல் செல்ல ஏற்பாடு செய்யப்படுமா என்ற கேள்விக்கு அது குறித்து விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட விஜய் என்ற நபர் தர்மபுரியில் இருக்கக்கூடிய காட்டுப்பகுதியில் ஒளிந்திருப்பதாக தகவல் கிடைக்க பெற்றுள்ளது என்றவர் ஐந்து தனிப்படைகள் தொடர்ந்து தேடி வருவதாகவும் கூறினார். கொள்ளையடிக்கப்பட்ட பெரும்பாலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் மீதி இருக்கக்கூடிய நகைகள் கூடிய விரைவில் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags

Next Story