திருப்பூரில் பாலத்தின் பணிகள் குறித்து கமிஷனர் ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட வரும் பாலத்தின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாநகராட்சி (மண்டலம்-3), 44-வது வார்டு, ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலம், 43-வது வார்டு, நட்ராஜ் தியேட்டர் அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே நடைபாதையுடன் கட்டப்பட்டு வரும் (RCC) பாலம், மற்றும் மாநகராட்சி 4-வது மண்டலம், 41-வது வார்டு, முருகம்பாளையம் அருகே தந்தை பெரியார் நகர் பகுதியில் உட்கட்டமைப்பு நிதி (2022-2023) யின் கீழ் ரூபாய் 2.86 கோடி மதிப்பீட்டில் ஜமுனை ஓடையின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்தின் கட்டுமான பணியையும், கட்டுமான பொருட்களின் தரம் குறித்தும் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அப்போது தலைமை பொறியாளர் திருமாவளவன், மாநகர பொறியாளர் லட்சுமணன், உதவி பொறியாளர் சிவக்குமார், இளநிலை பொறியாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story