மனித உரிமைகள் மேம்பட உறுதிமொழி
மல்லசமுத்திரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மனித உரிமைகள் மேம்பட உறுதிமொழி எடுத்தனர்.
மல்லசமுத்திரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மனித உரிமைகள் மேம்பட உறுதிமொழி எடுக்கப்பட்டது.
மல்லசமுத்திரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று, மனித உரிமைகள் மேம்பட வலியுறுத்தி, மாணவிகள் அனைவரும், இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்ததக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார உறுதிமொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன்.
என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம் பிறருடைய மனித உரிகைகளை மீறுகிற எந்தவொரு செயலையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன். என்று கையை நீட்டி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பொறுப்பு தலைமை ஆசிரியை சுசீலா, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.