கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு குழு கூட்டம்
குழு கூட்டம்
பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் 70-வது அனைத்து இந்திய கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் பாண்டியன் தலைமையில் குழு கூட்டம் நடைப்பெற்றது. இக்குழு கூட்டத்தில் 14.11.2023 முதல் 20.11.2023 வரை கூட்டுறவு வாரவிழா கொண்டாடுவதை முன்னிட்டு கூட்டுறவு சங்கங்களில் கொடியேற்றுதல், மரக்கன்று நடுதல், இரத்ததான முகாம், கால்நடை சிகிச்சை முகாம். பள்ளி மாணவ மாணவிகளுக்கு கவிதைப்பேட்டி கட்டுரைபோட்டி, பேச்சுபோட்டி. துறை பணியாளர்களுக்கு விளையாட்டுப்போட்டி நடத்துதல் மற்றும் இறுதி நாள் அன்று சிறந்த சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் பெரம்பலூர் சரக துணைப்பதிவாளர் அ.இளஞ்செல்வி, பால்வளம் துணைப்பதிவாளர் ஜெய்பாலன் பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் விஸ்வநாதன் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குநர் ரமேஷ் பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு அச்சக செயலாட்சியர் நர்மதா பெரம்பலூர் மண்டல இணைப்பதினாளர் அலுவலக கண்காணிப்பாளர் மு.சமரசம் கூட்டுறவு சார்பதிவாளர் பால்வளம் ஜோ.விஜயா திருச்சிராப்பள்ளி ஆவின் விரிவாக்க அலுவலர் வெ.இளங்கோவன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
Next Story