அரசு பஸ் கண்ணாடி திடீரென உடைந்ததால் பரபரப்பு

அரசு பஸ் கண்ணாடி திடீரென உடைந்ததால்  பரபரப்பு

காரைக்குடியில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி, நத்தம் சாலையில் நொச்சி ஓடைப்பட்டி அருகே திடீரென உடைந்ததால் பரபரப்பு உண்டானது.

காரைக்குடியில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி, நத்தம் சாலையில் நொச்சி ஓடைப்பட்டி அருகே திடீரென உடைந்ததால் பரபரப்பு உண்டானது.
காரைக்குடியில் இருந்து பழனி நோக்கி திங்கட்கிழமை காலை அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. நத்தம் சாலையில் நொச்சிஓடைப்பட்டி அடுத்துள்ள பதனீர்கடை பஸ் நிறுத்தம் பகுதியில் வந்தபோது திடீரென பேருந்தின் முன்பக்க கண்ணாடி வெடித்து உடைந்தது. இதனால் ஓட்டுநர் நிலைதடுமாறி பிரேக் போட்டார். அப்போது இடிபாடுகளுக்குள் கீழே விழுந்து 5 பயணிகள் காயமடைந்தனர். கண்ணாடி வெடித்து சிதறியதில் டிரைவர் கண்ணனின் கை நரம்பு அறுந்து ரத்தம் வலிய தொடங்கியது. இது குறித்து மற்ற பயணிகள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து அவசர ஊர்தி வரவழைத்தனர். மற்ற பயணிகள் அனைவரும் மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு அதில் பழனிக்கு சென்றனர்.

Tags

Next Story