தூக்கு கயிற்றுடன் மனு அளிக்க வந்தவர்களால் பரபரப்பு

தூக்கு கயிற்றுடன் மனு அளிக்க வந்தவர்களால் பரபரப்பு

மனு அளிக்கவந்தவர்கள் 

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகே ஒரே இடத்தை பல பேருக்கு விற்பனை செய்து அட்வான்ஸ் தொகை பெற்று மோசடி புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தாமதப்படுத்துவதாக பாதிக்கப்பட்டவர்கள் தூக்கு கயிற்றுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகே பொங்கு பாளையம் பகுதியில் ஆனந்தன் என்பவர் விஜயா கார்டன் என்ற பெயரில் வீட்டுமனைகளை விற்பனை செய்து வருவதாக தொலைக்காட்சி விளம்பரம் மற்றும் புரோக்கர் யூகி என்பவர் மூலமாக அறிந்து பிச்சம்பாளையம் ,போயம்பாளையம் உள்ளிட திருப்பூர் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆனந்தன் என்பவரை அணுகி உள்ளனர் ள். இதில் ஆனந்தன் தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருவதாகவும் பொங்கு பாளையம் பகுதியில் 6 ஏக்கர் நிலத்தை பிரித்து வீட்டு மனைகளாக மாற்றி 3,60,000 ருபாய்க்கு விற்பனை செய்வதோடு தன்னிடம் கிரயம் செய்தவர்களுக்கு உடனடியாக லோன் பெற்று கொடுத்து வீடு கட்டவும் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

இதனை நம்பி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் முதல் தவணையாக ஒரு லட்சமும் அதற்குப் பிறகு 33,000 செலுத்தி ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளனர். குறிப்பிட்ட காலத்திற்குள் கிரயம் செய்து தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இது குறித்து விசாரித்த போது ஒரே இடத்தை பல பேருக்கு விற்பனை செய்வதாக அட்வான்ஸ் தொகை பெற்றுக்கொண்டு பெயரளவில் ஒப்பந்தம் செய்துள்ளனர். இதை அறிந்து ஆனந்தனிடம் கேட்டபோது தரக்குறைவாக பேசுவதோடு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் எங்கு புகார் கொடுத்தாலும் தன் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் எனவும் தனக்கு அமைச்சர் முதல் காவல்துறையினர் வரை அனைவரும் பழக்கம் என்பதால் உங்களால் ஒன்றும் செய்து விட முடியாது என மிரட்டுவதாகவும் இதுகுறித்து பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி பாதிக்கப்பட்டவர்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று தூக்கு கயிற்றுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து பேசிய அவர்கள் புகார்தாரர் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை மீட்டு தரவில்லை என்றால் வரும் நாளைய தினம் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story