எடப்பாடி தாதாபுரம் ஊராட்சியில் ஊர்ப்பொதுமக்கள் மறியலால் பரபரப்பு

எடப்பாடி  தாதாபுரம் ஊராட்சியில் ஊர்ப்பொதுமக்கள் மறியலால் பரபரப்பு


எடப்பாடியை அடுத்த தாதாபுரம் ஊராட்சியில் காங்கிரட் சாலை அமைக்க ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து ஊர் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.


எடப்பாடியை அடுத்த தாதாபுரம் ஊராட்சியில் காங்கிரட் சாலை அமைக்க ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து ஊர் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

எடப்பாடியை அடுத்த தாதாபுரம் ஊராட்சியில் கான்கிரீட் சாலை அமைக்க ஒருவர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்ததைக் கண்டித்து அப்பகுதி ஊர்ப்பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் தாதாபுரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 250 மீட்டர் தொலைவிற்கு 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அப்போது கான்கிரீட் சாலை அமைக்கும் நுழைவு வாயில் பகுதியில் குடியிருக்கும் பாலசுப்பிரமணி என்பவர் அப்பணிக்கு தேவையான இடத்தை விட மாட்டேன் என்றும் கான்கிரீட் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் வந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் எடப்பாடியில் இருந்து தாரமங்கலம் செல்லும் சாலை தாதாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இத்தகவல் அறிந்த எடப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டு பின்னர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் நடைப்பெற்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Next Story