மனு கொடுக்க மாடுகளுடன் வந்ததால் பரபரப்பு
மாடுகளுடன் வந்த விவசாயிகள்
திண்டுக்கல் மாவட்டம் ராஜாக்காபட்டியை சேர்ந்தவர் அய்யம் பெருமாள் (24). தனது தாத்தா பெரியசாமி (75) ஆகியோர் மாடுகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்கள் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினர், இது குறித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விவசாயி அய்யம்பெருமாள் கூறியதாவது: எனது தாத்தா பெரியசாமிக்கு ராஜக்காபட்டி பகுதியில் 85 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலமானது பெரியசாமி மற்றும் அவரது சகோதரர்கள் பெயரில் கூட்டு பட்டாவாக உள்ளதால் அந்த நிலத்தை பிரித்து தர மற்ற உறவுகள் மறுப்பதாகவும், தற்போது தாத்தா பெரியசாமி உடல்நிலை மோசமாக உள்ளதால் மருத்துவ செலவிற்காக நிலத்தை விற்பதற்கு பிரித்து தர மறுக்கிறார்கள். இதனால் கலெக்டர் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாடுகளுடன் மனு கொடுக்க வந்தேன் என தெரிவித்தார்.