கீழ்வேளூர் ஊராட்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 100 நாள் வேலை செய்த அனைவருக்கும் பழைய முறைப்படி வேலை கொடுக்க வேண்டும். வேலை செய்யும் பயனாளிகளுக்கு அரசு அறிவித்த 319 ரூபாய் வழங்க வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை பேரூராட்சி,நகராட்சி பகுதிக்கும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
விவசாய தொழிலாளர் சங்கத்தின் கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் சிவசாமி தலைமை நடைபெற்ற ஆர்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜன்,ஒன்றிய செயலாளர் முருகையன் இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் காசிநாதன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் மேகலா மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்