இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர்கள் கூட்டம் - நிர்வாகிகள் பங்கேற்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு மற்றும் இடைக்குழு செயலாளர்கள் கூட்டம் சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மீனா சேதுராமன் தலைமை தாங்கினார் இந்தக் கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராமசாமி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குணசேகரன், மாவட்ட செயலாளர் சாத்தையா முன்னாள் மாவட்ட செயலாளர் கண்ணகி உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடனடியாக ஆய்வு செய்து நரம்பு மூலிகை சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் உடனடியாக நியமிக்க வேண்டும். மருத்துவமனையில் அந்த துறை சார்ந்த தலைவர்கள் என் நேரம் இருக்க வேண்டும். மருத்துவமனையைச் சுற்றி உள்ள சீமை கருவேல் மரங்களை உடனடியாக அகற்றி சுற்றியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். சிவகங்கை நகரத்தில் சுற்றித் தெரியும் மாடுகளை உடனடியாக நகராட்சி நிர்வாகம் பிடித்து அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகிறது. வேளாண் அதிகாரிகள் விவசாயிகளை நிலத்தினை நேரடியாக ஆய்வு செய்யாமல் விவசாயிகளுக்கு நோய் தடுப்புக்கான அறிவுரை கூறாமலும் இருப்பதை உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும். சிவகங்கை தொண்டி சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள நீரை உடனடியாக அகற்ற வேண்டும். சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேங்கியுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் சிவகங்கை மாவட்டத்தில் வடிகால் அமைப்புகளை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கையில் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது