சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி: சீர்வரிசைகளை வழங்கிய அமைச்சர்

சமுதாய வளைகாப்பு விழாவில் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு அமைச்சர்கள் கே.என் நேரு மற்றும் சக்கரபாணி ஆகியோர் வளைகாப்பு நடத்தி அரசின் சீர்வரிசைகளை வழங்கினர்.
சமுதாய வளைகாப்பு
சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில் சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில் சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டு 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நடத்தி, அரசின் சார்பில் சீர்வரிசைகள் மற்றும் 5 வகையான வளைகாப்பு உணவுகளை வழங்கினார்கள். விழாவில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, குழந்தை முதல் இறுதி வரை அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் திமுக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருவதாகவும், இலவச பேருந்து, மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம் என பெண்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.
Next Story



