சமுதாயக்கூட கட்டுமான பணி - ஆளூர் ஷாநவாஸ் ஆய்வு
ஆளூர் ஷாநவாஸ்
திட்டச்சேரி பேரூராட்சியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூட கட்டுமான பணிகளை முகமது ஷாநவாஸ் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு வெள்ளத்திடலில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடம் கட்டுமான பணிகளை முகமது ஷாநவாஸ் எம்எல்ஏ நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திகா, பேரூராட்சி மன்ற உறுப்பினர் முகமது சுல்தான், பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், வரிதண்டலர் ஜெகவீரபாண்டியன்,அலுவலக உதவியாளர் மாதவன் மற்றும் அலுவலர்கள்,பொதுமக்கள் உடன் இருந்தனர்.
Next Story