பராமரிப்பின்றி காணப்படும் சமுதாய கூடம் - சீரமைக்க கோரிக்கை
பராமரிப்பற்ற சமுதாய நல கூடம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பராமரிப்பின்றி உள்ள சமுதாய கூடத்தை சீரமைக்க அரசு அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமுதாய கூடம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில் அரசு ஊழியர்களின் இல்ல நிகழ்ச்சிகள் மற்றும் அரசின் நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பயன்படுத்தி வருகின்றது. தற்போது இந்த சமுதாய கூடம் செடி,கொடிகள் வளர்ந்து காடுகள் போல் புதர்கள் மண்டி பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதனால் விஷ பூச்சிகள் தங்குமிடமாக மாறிவருகிறது. இதன் அருகில் போக்குவரத்து அலுவலகம், அரசு உயர் அதிகாரிகள் வசிக்கும் அரசு குடியிருப்புகள் அமைந்துள்ளன. அனைவரும் பயன்படுத்தி வரும் சமுதாய கூடத்தை மாவட்ட நிர்வாகம் பராமரிப்பு செய்ய வேண்டும் என அரசு அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story