சமுதாய கழிப்பிட கட்டிடம் திறப்பு விழா

சமுதாய கழிப்பிட கட்டிடம் திறப்பு விழா
தென்காசியில் புதுப்பிக்கப்பட்ட சமுதாய கழிப்பிட கட்டிடம் திறப்பு
தென்காசியில் புதுப்பிக்கப்பட்ட சமுதாய கழிப்பிட கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், தென்காசி நகராட்சி 6-வது வார்டு மலையான் தெருவில் புதுப்பிக்கப்பட்ட சமுதாய கழிப்பிடம் கட்டிடத்தை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தென்காசி நகர் மன்ற தலைவரும், தென்காசி நகர திமுக செயலாளருமான சாதிர் தலைமை வகித்து திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சுப்பையா, நகர்மன்ற உறுப்பினர் சுமதி, தென்காசி நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் மற்றும் சுகாதார அலுவலர், ஆய்வாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story