தனியார் பேருந்துகளின் நேரப்போட்டியால் பயணிகள் அச்சம்

தனியார் பேருந்துகளின் நேரப்போட்டியால் பயணிகள் அச்சம்

வந்தவாசி அடுத்த சடத்தாங்கல் கூட்டுச்சாலை அருகில் தனியார் பேருந்துகள் ஒன்றை ஒன்று முந்திச் செல்வதால் பயணிகள் அச்சம் .

வந்தவாசி அடுத்த சடத்தாங்கல் கூட்டுச்சாலை அருகில் தனியார் பேருந்துகள் ஒன்றை ஒன்று முந்திச் செல்வதால் பயணிகள் அச்சம் .
வந்தவாசி அருகே தனியார் பேருந்துகளின் நேரப்போட்டியால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளாரில் இருந்து காலை 6:30 மணிவாக்கில் வந்து புறப்படும், வேலூர் திண்டிவனம் வழி ராமஜெயம் என்ற தனியார் பேருந்து சடத்தாங்கல் கூட்டுச்சாலை வழியாக ஆரணி நோக்கி சென்று கொண்டிருந்தது. அதே நேரம் வந்தவாசியில் இருந்து ஆரணிக்கு வந்த நாராயணமூர்த்தி என்ற தனியார் பேருந்து ராமஜெயம் பேருந்தை முந்தி சென்றது. அதன் பின்னர் நாராயணமூர்த்தி பேருந்தை முந்த ராமஜெயம் முந்த முயன்றது. இரு பேருந்துகளின் போட்டிகளுக்கு பிறகு ஆரணி நெருங்கும் சமயத்தில் ஒரு வழியாக ராமஜெயம் பேருந்து முந்தியது. நேரப்போட்டியால் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல், சினிமா படக்காட்சிபோல பேருந்தை விரட்டுவதால் பேருந்துகளின் பயணிகள் அச்சம் அடைந்தனர். சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள், சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகள், பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story