மின்கம்பத்தில் பைக் மோதி கம்பெனி மேற்பார்வையாளர் பலி
வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள சீப்பால் ஆர்.சி. ஆலயம் அருகே வசித்து வருபவர் ரகுபதி (வயது27). குருந்தன்கோடு அருகே உள்ள தனியார் வலை கம்பெனியில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாவில்லை. நேற்று இரவு இவர் தனது சகோதரரிடம் வேலைக்கு செல்வதாக கூறி மோட்டார் சைக்கிளில் சென்றார். கொடுப்பைக்குழி அருகே வந்த போது நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் உள்ள மின் கம்பத்தில் அவரது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ரகுபதி தலையில் பலத்த காயமடைந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் அவரது சகோதரர் பகவதிராஜா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story