சமரச தீர்வு மையம் மூலம் இரு வழக்குகளுக்கு ரூ.53 லட்சம் இழப்பீடு

சமரச தீர்வு மையம் மூலம் இரு வழக்குகளுக்கு ரூ.53 லட்சம் இழப்பீடு

சமரச தீர்வு மையம்  

சேலம் உடையாபட்டி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணி (54 ) இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு ஆவின் பால் பண்ணையில் பணி முடித்து இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கடலூர் மெயின் ரோடு குண்டக்கல்லூர் பெரியாண்டிச்சி அம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கார் மோதிய விபத்தில் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த வழக்கு சமரசத் தீர்வு மையத்திற்கு வந்தது. இதனடிப்படையில் தீர்வு காணப்பட்டு தனியார் காப்பீடு நிறுவனம் இறந்த மணியின் மனைவி புஷ்பா மற்றும் மகன், மகள் உள்ளிட்ட 4 பேருக்கும் சேர்த்து ரூ. 40,லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. இன்று நடந்த சிறப்பு முகாமில் அதற்கான காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினார். இதே போல சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த சண்முகம் இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு இரண்டு சக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி எதிர்ப்பாராத விதமாக மோதி விபத்தில் சண்முகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தும் சமரச தீர்வு மையம் மூலம் தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள ஐந்து பேருக்கு எஸ்பிஐ காப்பீட்டு நிறுவனம் மூலம் 13 லட்ச ரூபாய் காசோலை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினார்.

Tags

Next Story