நிவாரணத்தொகை வழங்கணும் !

நிவாரணத்தொகை வழங்கணும் !
 விருதுநகரில் சமீபத்தில் பெய்த கனமழையில், பலர் வீடுகளையும், கால்நடைகளையும் இழந்துள்ளதால், உரிய நிவாரணத்தொகை வழங்குமாறு கோரிக்கை வலுத்துள்ளது.

விருதுநகரில் சமீபத்தில் பெய்த கனமழையில், பலர் வீடுகளையும், கால்நடைகளையும் இழந்துள்ளதால், உரிய நிவாரணத்தொகை வழங்குமாறு கோரிக்கை வலுத்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் பெய்த கனமழையில் ஓருவர், 346 ஆடுகள், 2 பசு, 4000 கோழி, 15 வீடுகள் முழுவதுமாக இடிந்துள்ளது.மேலும் 226 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தால் மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் டிச. 17, 18 ஆகிய இரு நாட்களில் கனமழை வெளுத்து வாங்கியது. மக்கள் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மழை பெய்ததால் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். இரண்டு நாட்கள் பெய்த கனமழையில் வறண்டு கிடந்த அனைத்து பகுதிகளிலும் நீர் சென்றடைந்தது. மாவட்டத்தில் பல ஆறுகளில் 10 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் நீர் தேக்கங்கள், கண்மாய்கள், குளங்கள் என அனைத்திலும் தண்ணீர் மறுகால் பாய்ந்தது.இதனால் மாவட்டத்தின் நீர் தேவை பூர்த்தியானது. ஆனால் வெள்ளத்தில் சிக்கி மூதாட்டி உட்பட இருவர் பலியாயினர். விருதுநகர் மாவட்டம் முழுவதும் நகர், ஊரகப்பகுதிகளில் மொத்தம் 221 வீடுகள் பகுதி அளவு கனமழையால் சேதமாகி உள்ளது. எனவே கால்நடை உயிரிழப்புகள், வீடுகள் இடிந்து, சேதமும் அதிகரித்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story