நெல்லையில் பயிற்சியாளர்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகள்

நெல்லையில் பயிற்சியாளர்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகள்
மாவட்ட ஆட்சியர் 
திருநெல்வேலி மண்டலத்தைச் சார்ந்த அரசினர்,தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று வரும் பயிற்சியாளர்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகள் நடைபெறவுள்ளது.

திருநெல்வேலி மண்டலத்தில் விருதுநகர்,தூத்துக்குடி,திருநெல்வேலி,தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த அரசினர் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று வரும் பயிற்சியாளர்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகள்,

வரும் 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்கள் ஆண்களுக்கும் 16.02.2024 அன்று ஒருநாள் பெண்களுக்கும் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இவ்விளையாட்டுப்போட்டிகளில் கால்பந்து, கைப்பந்து, பால்பேட்மிட்டன்,டெனிகாய்ட் மற்றும் தடகளப்போட்டிகள் இருபாலருக்கும் நடைபெறவுள்ளது.

இதில் மேற்கண்ட 5 மாவட்டங்களைச்சார்ந்த சுமார் 700 பயிற்சியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் சான்றுகள் வழங்கப்பட உள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story