மணக்காட்டூரில் பந்தய கழுமரம் ஏறுதல் நிகழ்ச்சி
நத்தம் அருகே மணக்காட்டூர் அய்யனார் சுவாமி புரவி எடுத்தல் முத்தாலம்மன் கோயில் உற்சவ விழாவில் பந்தய கழுமரம் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள மணக்காட்டூரில் உள்ள அய்யனார் சுவாமி புரவி எடுத்தல் முத்தாலம்மன் சுவாமி உற்சவ விழா ஆண்டு தோறும் நடைபெறும். இதையொட்டி இக்கோயில் திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 23-அம் தேதி சுவாமிக்கு பிடிமண் கொடுத்தல் நிகழ்ச்சியை நடந்தது.சுவாமிக்கு காப்பு கட்டிய பின்னர் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.
தோரணம் கட்டுதல் நிகழ்ச்சியும் அன்றிரவு முத்தாலம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகளைத் தொடர்ந்து சர்வ அலங்காரத்தில அம்மன் எழுந்தருளி மின் ரதத்தில் நகர் வலம் வந்தார்.பின்னர் படுகளம் போடுதல், குட்டி கழுமரம் ஏறுதல நிகழ்ச்சி நடந்தது. பந்தய கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு போட்டி போட்டு ஏறினர். அதில் ஏறி அடையாளத்தை முதலில் தொட்ட இளைஞருக்கு பரிசு வழங்கப்பட்டது.