திருப்பத்தூர் மாவட்டத்தில் போதைப்பொருள் குறித்து புகார்: ஆட்சியர் தகவல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் போதைப்பொருள்  குறித்து புகார்: ஆட்சியர் தகவல்

மாவட்ட ஆட்சியர் 

திருப்பத்தூர் மாவட்டத்தில் போதைப் பொருள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என 9159959919 என்ற செல் போன் எண்ணை மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்தினார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக 2ம் தள கூட்ட அரங்கில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் உள்ளிட்ட 4 தாலுக்காக்களுக்கு,

உட்பட்ட பொதுமக்கள் இடையே போதை பொருள் நடமாட்டம் இருந்தால் அது குறித்து 9159959919 என்ற எண்ணில் புகார் அளிக்க பொதுமக்கள் முன்வரலாம் என்று காவல்துறை கட்டுபாட்டில் இயங்கும் செல் போன் எண்ணை அறிமுகபடுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தில் 13 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில்,

போதை பொருள் தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக கண்காணிக்கப்படும். தகவல் அளிக்கும் நபர்கள் குறித்து ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும், இது வரை கள்ளச்சாராயம் சம்மந்தாக இந்த ஆண்டு 3671 மேல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று 3643 கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பூட் லெக்கர் என்று சொல்லக்கூடிய வழக்குகள் 12 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து. போதை பொருள் விற்பனை தடுக்க குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது என்றும் கூறினார். அதே போன்று பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே,

போதை பொருள் தடுப்பு குழு அமைத்து மாணவர்கள் மத்தியில் போதை பொருள் செல்லாமல் தடுக்க முடியும் என்று கூறினார். அதே போன்று இனி வரும் காலங்களில் சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்பகொள்ளபடும் என்றும் கூறினார்.

Tags

Next Story