ஊராட்சி நிதியை தவறாக பயன்படுத்தி சிமெண்ட் சாலை அமைப்பதாக புகார்

ஊராட்சி நிதியை தவறாக பயன்படுத்தி சிமெண்ட் சாலை அமைப்பதாக புகார்

சாலை அமைக்கும் பணி

சூளகிரி அருகே, ஊராட்சி நிதியை ஊராட்சி மன்ற தலைவர் தவறாக பயன்படுத்தி தனது மாந்தோப்பை விற்கும் நோக்கில் சிமெண்ட் சாலை அமைத்து வருவதாக பாமக உழவர் பேரியக்க மாநில துணை தலைவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த சூளகிரி ஒன்றியம் சென்னப்பள்ளி ஊராட்சியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சின்னார் அருகே கரகானப்பள்ளி கிராமத்தில் 9.50 லட்சம் ரூபாயில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி செல்வம் அவர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. இதுக்குறித்து பேட்டியளித்த பாமகவின் உழவர் பேரியக்க மாநில துணை தலைவர் வரதராஜ்: கரகானப்பள்ளியில் சாலை அமைப்பதாக கூறி ஊராட்சி மன்ற தலைவர் தனக்கு சொந்தமான மாந்தோப்பிற்கு மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் சாலை அமைத்து வருகிறார்.. இதுக்குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனு அளித்துள்ளேன். ஊராட்சி நிதியை தனி நபருக்காக தவறுதலாக பயன்படுத்துவதை மாவட்ட ஆட்சியர், சூளகிரி தாசில்தார் தடுத்து நிறுத்த வேண்டும், இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக எச்சரித்துள்ளார்.

Tags

Next Story