அத்துமீறிய ஊராட்சி தலைவர் மீது புகார்

அத்துமீறிய ஊராட்சி தலைவர் மீது புகார்

 கூட்டுறவு விற்பனையகம் 

செய்யாறு அருகே கடுகனூர் கூட்டுறவு விற்பனையகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான கூப்பன்களை கூட்டுறவு விற்பனையாளரிடம் இருந்து அத்துமீறி பிடுங்கி சென்ற ஊராட்சி மன்ற தலைவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதி கடுகனூர் கிராமம்.இக் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் 437 குடும்பங்களுக்கு குடும்ப அட்டைகள் உள்ளது .இவர்கள் கூட்டுறவு கடை எண் எப்பி 043 கூட்டுறவு விற்பனையகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்து வருகின்றனர். இந்த கடையின் சேல்ஸ்மேனாக பில்லாந்தி பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவர் பணியாற்றி வருகிறார்.

தமிழக அரசு வழங்கக்கூடிய பொங்கல் பரிசு தொகுப்புக்கான கூப்பன்கள் விநியோகம் கடந்த இரண்டு நாட்களாக கடுகனூர் கிராமம் மற்றும் கடுகனூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் விநியோகிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் பிற்பகலுக்கு மேல் ஆதிராவிடர் குடியிருப்பு பகுதியில் சேல்ஸ்மேன் சின்னதுரை குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு கூப்பன் விநியோகம் செய்து வந்தார்.

அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷ் குமார் என்பவர் சேல்ஸ்மேனிடம் குடும்ப அட்டைதாரர்களுக்கான பட்டியலை பிடுங்கி எங்கள் பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுத்து விடுகிறேன் எனக்கூறி பட்டியலை பிடுங்கி பத்துக்கும் மேற்பட்ட கூப்பன்களுக்கு கையெழுத்திட்டு பிடுங்கிக் கொண்டு சேல்ஸ்மேன் இடம் பட்டியலை கொடுத்து விட்டார்.இதில் ஊராட்சி மன்ற தலைவர் கையெழுத்திட்ட கூப்பன்கள் இறந்த நபர்களுடையது என தெரிய வந்துள்ளது.

இது செல்லாதது. இது குறித்து சேல்ஸ்மேன் சின்னதுரை உடனடியாக வட்ட வழங்கல் அலுவலர் சங்கீதா மற்றும் கூட்டுறவுத்துறை தனி அலுவலர் முருகேசன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்தில் செய்யாறு வட்ட வழங்கல் அலுவலர் சங்கீதா மற்றும் கூட்டுறவு தனி அலுவலர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர் இதில் சேல்ஸ்மேன் இடம் பட்டியலை பிடுங்கி கூப்பனை பிடுங்கி சென்றது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் கூப்பனில் ஆறு நபர்கள் இறந்து விட்டதாக அறியப்படுகிறது இதனை பயன்படுத்தி பணம் மற்றும் இலவச பொருட்கள் பெறும் நோக்கில் பிடுங்கி சென்று இருக்கலாம் எனவே சம்பந்தப்பட்ட கடையின் குடும்ப அட்டைகள் ஆய்வு செய்து பணம் மற்றும் இலவச பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் சேல்மேனிடம் அத்துமீறி ஊராட்சி மன்ற தலைவர் கூப்பன்களை பிடுங்கி சென்ற சம்பவம் குறித்து சேல்ஸ்மேன் பெரணமல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story